செவிலியர் பட்டயப்படிப்பு பழங்குடி மாணவிகள் விண்ணப்பிக்க அழைப்பு

செவிலியர் பட்டயப்படிப்பு பழங்குடி மாணவிகள் விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு  ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பழங்குடியினர் நலத்துறையினர் மூலம், அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் பயிற்சி மையங்களில், பட்டயப்படிப்பில் சேர்ந்து 3 ஆண்டுகள் கல்வி பயில ஆகும் கல்வி கட்டணம் முழுவதையும், அரசே ஏற்கும் வகையில் அரசாணை வரப்பெற்றுள்ளது. 

அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல  உண்டு உறைவிடப் பள்ளியில், கல்வி படித்துள்ள பழங்குடியின மாணவிகளுக்கு, மார்ச் 2020ல் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். செவிலியர் பட்டயப்படிப்பில் சேர, 12ம் வகுப்பு மாற்றச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் (40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்), சாதிச்சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவைகளின் நகல்களுடன்  விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதியான நபர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் னால அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாகவே அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறை  எண் . 26 ல் நேரடியாகவோ, வருகிற 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain