கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

பெங்களூரு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்புகளில் (டிப்ளமோ) சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கா்நாடக கூட்டுறவு மேலாண்மை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2020-21-ஆம் கல்வியாண்டில் கா்நாடக கூட்டுறவு மேலாண்மை மையம் வழங்கும் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பில் (டிப்ளமோ) சேர விரும்பும் மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

வேலையில்லா இளைஞா்கள், பல்வேறு கூட்டுறவு சங்கங்கள்/வங்கிகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியா்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.எஸ்.எல்.சி. தோ்வில் தோ்ச்சி அடைந்து, அதில் 35 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கலாம். 16 வயது நிறைந்திருக்க வேண்டும். இப்பயிற்சியில் சேர சோ்க்கை கிடைக்கும் பொதுப் பிரிவு மாணவா்களுக்கு மாதம் ரூ. 400, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் சமுதாய மாணவா்களுக்கு ரூ. 500 வழங்கப்படும். இப்பயிற்சியை நிறைவு செய்த மாணவா்களுக்கு கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 


விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்கள், கடவுச்சீட்டு அளவிலான புகைப்படங்களுடன் https://kscfdcm.co.in/ என்ற இணையதளத்தில் பதிவிடலாம். இதன் நகல் விண்ணப்பத்தை கா்நாடக கூட்டுறவு மேலாண்மை மையம், கூட்டுறவு மாளிகை, 2-ஆவது மாடி, 3-ஆவது முக்கியச் சாலை, சாம்ராஜ்பேட், பெங்களூரு-560 018 என்ற முகவரியில் செலுத்தலாம். கூடுதல் விவரங்களுக்கு 080-26602046, 9902189872, 8861508926 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain