Brain Booster: 2-வது பயிற்சி பட்டறை ஆன்லைனில் ஜன.18-ல் தொடக்கம்

Brain Booster: 2-வது பயிற்சி பட்டறை ஆன்லைனில் ஜன.18-ல் தொடக்கம்

Brain Booster: 2nd Training Workshop online starting on Jan.18

Brain Booster: 2-
வது பயிற்சி பட்டறை ஆன்லைனில் ஜன.18-ல் தொடக்கம்

 ‘கைட் பிரைனிங் இன்ஸ்டிடியூட்’, ‘இந்து தமிழ் திசைநாளிதழ் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கானபிரைன் பூஸ்டர்எனும் வேகமான நினைவாற்றல் மற்றும் கணிதத் திறன் தொடர்பான 2-வதுஆன்லைன் பயிற்சிப் பட்டறையை நடத்துகின்றன. இந்த பயிற்சிப் பட்டறை வரும் 18-ம்தேதி தொடங்கி 7 நாட்கள் நடைபெறுகிறது.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வேகமான நினைவாற்றல் மற்றும் கணிதத் திறனை அதிகப்படுத்தும் நோக்கிலும், ‘நீட்’, ஜேஇஇ உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்காக தயாராகி வருவோருக்கு பயனளிக்கும் வகையிலும்பிரைன் பூஸ்டர்எனும் 2-வது ஆன்லைன் பயிற்சிப் பட்டறையை திருச்சியில் உள்ளகைட் பிரைனிங் இன்ஸ்டிடியூட்மற்றும்இந்து தமிழ் திசைநாளிதழ் இணைந்து நடத்துகின்றன.

இதில் 9 முதல் 19 வயது வரையுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட அனைவரும் பங்கேற்கலாம். இந்த பயிற்சிப் பட்டறை ஜனவரி 18-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை 7 நாட்களுக்கு தினமும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெற உள்ளது.

இதில் நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கான நுட்பங்கள்கணிதத் திறனை அதிகரித்தல்விரைவான வாசிப்புக்கான நுட்பங்கள்ஆய்வு நுட்பங்கள்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பயனளிக்கும் செறிவுநுட்பங்கள் ஆகியவை பயிற்றுவிக்கப்படும்இது மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க உதவுவதோடுபோட்டித் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளையும் மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள பயன்படும்.

இந்த பயிற்சியை 15 ஆண்டுகால அனுபவமிக்க நினைவாற்றல் பயிற்சியாளரும், ‘கைட் பிரைனிங் இன்ஸ்டிடியூட்’ இயக்குநருமான எஸ்.தமிழ்செல்வன் வழங்க உள்ளார்.

இதில் பங்கேற்க பதிவுக் கட்டணம் ரூ.885. பங்கேற்க விரும்புவோர் https://connect.hindutamil.in/event/78-brain-booster-2.html என்ற லிங்க்கில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

விவரங்களுக்கு: 9003966866 

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain