வேலை இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலை இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Unemployed youth can apply for the scholarship

வேலை
இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெறதகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலையில் இல்லாத நபர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஒன்பதாம் தேர்ச்சி பெற்று, பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300, பிளஸ் 2தேர்ச்சிக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம்வகுப்பு அதற்கு கீழ்படித்தவர்களுக்கு மாதம் ரூ. 600, பிளஸ் 2 தேர்ச்சிக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.

தகுதியுள்ளவர்கள் கல்வி சான்றிதழ்வேலைவாய்ப்பு அடையாளஅட்டையை காண்பித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பத்தைஇலவசமாக பெறலாம்www.tnvelaivaaippu.gov.in இணையதள முகவரியிலும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்யலாம்.

ஏற்கனவே உதவித்தொகை பெறுபவர்கள் பிப்ரவரி வரை சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்பிக்கலாம்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain