நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் தொடக்கம்

நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் தொடக்கம்

Pongal gift distribution begins Today at Ration shops

நியாயவிலைக்
கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் தொடக்கம்

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் இன்று தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் காலை மற்றும் மாலையில் தலா 100 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட உள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ அரிசிஒரு கிலோ சா்க்கரைமுழு நீள கரும்பு, 5 கிராம் ஏலக்காய்முந்திரிதிராட்சை தலா 20 கிராம் ஆகியன துணிப்பையில் வைத்து வழங்கப்பட உள்ளனஇத்துடன் ரூ.2,500 ரொக்கத் தொகை அளிக்கப்படுகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க வீடு வீடாக ஏற்கெனவே டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளனநாளொன்றுக்கு 200 குடும்ப அட்டைகள் வீதம் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட உள்ளதுவரும் 12-ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்கப்பட உள்ளது.

விடுபட்டவா்களுக்கு வரும் 13-ஆம் தேதியன்று அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain