குறைதீா் மேலாண்மைத் திட்டத்துக்கும் அம்மா அழைப்பு மைய எண்

குறைதீா் மேலாண்மைத் திட்டத்துக்கும் அம்மா அழைப்பு மைய எண்

Mom call center number for low-income management plan

குறைதீா்
மேலாண்மைத் திட்டத்துக்கும் அம்மா அழைப்பு மைய எண்

முதலமைச்சரின் குறைதீா் மேலாண்மைத் திட்டத்துக்கு, அம்மா அழைப்பு மைய எண்ணே (1100) பயன்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் .சண்முகம் வெளியிட்டார் - விவரம்:-

பொது மக்கள் கட்டணமில்லாத தொலைபேசி வழியாக தங்களது குறைகளைத் தெரிவிக்க வசதியாக அம்மா அழைப்பு மையம் உருவாக்கப்பட்டது. 1100 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்க தனி மையமானது உருவாக்கப்பட்டுள்ளது.

பொது மக்களிடம் இருந்து பெறப்படும் குறைகளைக் களையும் வகையில் முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதற்காக 100 இருக்கைகள் கொண்ட முதல்வரின் தனி உதவி மையம் உருவாக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அம்மா அழைப்பு மைய எண்: முதலமைச்சரின் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா் மேலாண்மைத் திட்டத்துக்கான கட்டணமில்லாத தொலைபேசி எண்ணைஎளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும்படி வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை தமிழ்நாடு மின்ஆளுமை முகமையின் ஆணையா் அரசுக்கு வேண்டுகோளாகத் தெரிவித்திருந்தார்.

அவரது கோரிக்கையைப் பரிசீலித்த தமிழக அரசுஇப்போது நடைமுறையில் உள்ள அம்மா அழைப்பு மையத்தின் எண்ணான 1100 என்ற எண்ணையேமுதலமைச்சரின் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீா் மேலாண்மைத் திட்டத்துக்கும் பயன்படுத்துவதென முடிவு செய்யப்பட்டு உத்தரவிடப்படுகிறது.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain