மாற்றுத்திறனாளிகள் ஸ்கூட்டர்களை பெற விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகள் ஸ்கூட்டர்களை பெற விண்ணப்பிக்கலாம்

People-with-disabilities-can-apply-for-scooters

மாற்றுத்திறனாளிகள்
ஸ்கூட்டர்களை பெற விண்ணப்பிக்கலாம்

முதுகுத் தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை பெற ஜனவரி 5.ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்க ஆணை வழங்கியுள்ளது.

கால்களில் முழுமையாக வலு இல்லாத முதுகு தண்டுவடம் (கழுத்து முதுகுஇடுப்புபாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

சென்னைதேனாம்பேட்டை டி.எம்.எஸ்வளாகம்வனத்துறை அலுவலக தரைத்தளத்திலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ 5.ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain