சேலம் ஆவின் பால்பண்ணையில் தொழில் பழகுனர் பயிற்சி

சேலம் ஆவின் பால்பண்ணையில் தொழில் பழகுனர் பயிற்சி

சேலம் ஆவின் பொதுமேலாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். நர்மதாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சேலம் ஆவின் பால்பண்ணையில் இளங்கலை அறிவியல் (கெமிஸ்ட்ரி) முடித்தவர்கள் மட்டும் "தொழில் பயிற்சி பழகுனர்" ஆக அமர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 


இந்த தொழிற்பயிற்சி பழகுனருக்கு  1 1/2 ஆண்டு பயிற்சி காலத்தில் முதல் ஆண்டு அரசு நிர்ணயம் செய்துள்ள உதவித்தொகை மாதம் ஒன்றுக்கு ரூ. 7 ஆயிரம் வழங்கப்படும். 2. ம் ஆண்டு ரூ. 7700 வழங்கப்படும். 

மேலும் அரசால் அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும் உதவித்தொகையும் வழங்கப்படும்.

சேலம் மாவட்டத்தில் தொழில் பழகுனராக பயிற்சி பெற விரும்புவோர் வருகிற 20.ந் தேதி அன்று பொது மேலாளர், சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், சித்தனூர், தளவாய்ப்பட்டி  அஞ்சல், சேலம் 636302. என்ற முகவரிக்கு இளங்கலை அறிவியல் (கெமிஸ்ட்ரி) முடித்தவர்கள் மட்டும் அசல் சான்றிதழ்களுடன் நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain