பெரம்பலூரில் நடைபெற உள்ள ஓவிய, சிற்பக் கண்காட்சியில் தங்களின் கலைப் படைப்புகளை புகைப்படங்களாகக் காட்சிப்படுத்தலாம்

பெரம்பலூரில் நடைபெற உள்ள ஓவிய, சிற்பக் கண்காட்சியில் தங்களின் கலைப் படைப்புகளை புகைப்படங்களாகக் காட்சிப்படுத்தலாம்

 

You can display your works of art as photographs at the upcoming painting and sculpture exhibition in Perambalur

பெரம்பலூரில் நடைபெற உள்ள ஓவிய, சிற்பக் கண்காட்சியில் தங்களின் கலைப் படைப்புகளை புகைப்படங்களாகக் காட்சிப்படுத்தலாம்

பெரம்பலூர் கலெக்டர் வெங்டபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில்:

தமிழக அரசின் சார்பில் கலை பண்பாட்டுத்துறை ஓவிய, சிற்பக்கலைகளை மேம்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இத்துறையின் கீழ் சென்னை, கும்பகோணம் ஆகிய இடங்களில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரிகளும், மாமல்லபுரத்தில் சிற்பக் கல்லூரியும் இயங்கி வருகிறது.

சிறந்த ஓவியம், சிற்பக் கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருது வழங்குதல், மாநில அளவிலான ஓவிய, சிற்பக் கலைக்காட்சி நடத்துதல், தனி நபர்ஃகூட்டுக் கண்காட்சி நடத்திட நிதியுதவி வழங்குதல் போன்ற பணிகள் கலை பண்பாட்டுத்துறையின் மூலம் நடைபெற்று வருகிறது.

கலை பண்பாட்டுத்துறையின் ஏழு மண்டலங்களிலும் ஆண்டுதோறும் ஓவிய, சிற்பக் கண்காட்சி நடத்திட சட்ட மன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய கலை பண்பாட்டுதுறையின் திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் நடப்பாண்டின் கண்காட்சி பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

கண்காட்சியில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இக்கண்காட்சியில் பங்கு பெற விருப்பம் உள்ள ஓவிய, சிற்பக்கலைஞர்கள் கண்காட்சியில் இடம் பெற தக்க தங்களின் கலைப்படைப்புகளின் 6 x 4 அளவு புகைப்படங்கள் மற்றும் தங்கள் சுய விவரக் குறிப்பினை மண்டல உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, நைட்சாயில் டெப்போ ரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளி – 620 006 என்ற முகவரிக்கு 31.01.2021.க்குள் அனுப்ப வேண்டும்.

கலைப்படைப்புகளின் புகைப்படங்களின் அடிப்படையில் தேர்வு செய்த ஓவியம், சிற்பம் உரிய கலைஞர்களிடம் பெறப்பட்டு கண்காட்சியில் வைக்கப்படும்.

ஏதேனும் விவரங்களுக்கு கலை பண்பாட்டுத்துறையின் திருச்சிராபள்ளி மண்டல அலுவலகத்தை 0431-2434122 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain