டாய் கேத்தான் 2021 போட்டிகள்-யுஜிசி அழைப்பு-பரிசுத்தொகை ரூ.50,00,000

டாய் கேத்தான் 2021 போட்டிகள்-யுஜிசி அழைப்பு-பரிசுத்தொகை ரூ.50,00,000

Toy Ketan 2021 Matches-UGC Call-Prize Rs.5000000

டாய்
கேத்தான் 2021 போட்டிகள்-யுஜிசி அழைப்பு-பரிசுத்தொகை ரூ.50,00,000

மத்திய அரசின் சார்பில் இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வீடியோ கேம் மற்றும் பொம்மைகள் தயாரிக்கும்டாய் கேத்தான் 2021’ போட்டிக்கு கலந்து கொள்ள மாணவர்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவில் விளையாட்டு பொம்மை சந்தை 1.5 பில்லியன் அமெரிக்கா டாலராக உள்ளது. ஆனால் இந்தியா பொம்மை சந்தை இறக்குமதியிலேயே சிறந்து விளங்குகிறது. ஆனால் இந்த பொம்மைகள் பெரும்பாலானவை இந்தியாவின் உள்ள கலாச்சாரம், நாகரிகம் குறித்தே உள்ளது. எனவே அயல்நாட்டு இறக்குமதியை குறைக்கவும் இந்திய கலாச்சாரம் அடிப்படையில் பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கவும், ஆத்மநீர்பர் பாரத் அபியான் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

அந்த திட்டத்தின் அடிப்படையில் மத்திய கல்வி அமைச்சகம் டாய் கேத்தான் 2021’ போட்டியை அறிமுகம் செய்து அதன்மூலம் நாட்டின் கலாச்சாரம் தொடர்பான, வீடியோ கேம்கள், விளையாட்டு பொம்மைகள், விளையாட்டு கருத்துகளை உருவாக்க நடத்தப்படுகிறது. அதன்படி வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி இந்த போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இந்த போட்டிகளை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம்மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை இணைந்து நடத்துகின்றனர்இதற்கு கல்லூரி மாணவர்கள்ஆசிரியர்கள்புதிதாக உள்ள பொம்மை வல்லுநர்கள்தொழில் வல்லுநர்கள் போன்றோர் கலந்து கொண்டு தங்களது புதுமையான பொம்மைகள் மற்றும் வீடியோ கேம்களை சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

போட்டிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஜனவரி 20-ஆம் தேதி வரை https://toycathon.mic.gov.in இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இதில் வெற்றி பெறும் நபர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ.50,00,000 வழங்கப்படுகிறதுஇதில் கலந்து கொண்ட சிறந்த பொம்மைகள் ‘டாய் கேத்தான்’ தேசிய பொம்மை கண்காட்சியில் இடம்பெறும்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain