தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் 18 வயது பூர்த்தியடைந்தவர்களும் நேரிலும் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் 18 வயது பூர்த்தியடைந்தவர்களும் நேரிலும் ஆன்லைனிலும் விண்ணப்பிக்க

The final voter list of Tamil Nadu has been released. Those whose names are not on the list and who have attained the age of 18 can apply in person and online.

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் 18 வயது பூர்த்தியடைந்தவர்களும் நேரிலும் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் 6 கோடியே 26 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் நேரிலும் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே மாத தொடக்கத்திலோ நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தயார்படுத்தும் விதமாக கடந்த நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது.

தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3,01,12,370ம், பெண்கள் 3,09,25,603 பேர், இதர பிரிவினர் 6,385 பேர் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை பரிசீலித்து, தகுதியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்படப்பட்டுள்ளது. மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ வெளியிட்டார். தமிழகத்தில் 3.08 கோடி ஆண் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பெண் வாக்காளர்கள் 3.18 கோடி பேர் உள்ளனர். மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 7246 பேர் உள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் நேரிலும் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்ஜனவரி 1, 2021ஆம் தேதி 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.

சென்னையில் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள்மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார்கள்இதையடுத்துபொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதாஎன்பதை https://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain