அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும், பிஎச்.டி. மாணவர்கள் மாத உதவித்தொகை

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும், பிஎச்.டி. மாணவர்கள் மாத உதவித்தொகை

Studying in government and government aided colleges, Ph.D. Monthly scholarship for students

அரசு
, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும், பிஎச்.டி. மாணவர்கள் மாத உதவித்தொகை

அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும், பிஎச்.டி. மாணவர்கள் மாத உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் முழுநேரமாக பிஎச்.டி. படித்து வரும் மாணவர்களுக்கு, தமிழக அரசின் ஆராய்ச்சிப் படிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கான விண்ணப்பம் www.tndce.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பிஎச்.டி. மாணவர்கள் தங்கள் நெறியாளர் மற்றும் கல்லூரி முதல்வர்களை அணுகி, பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் கையொப்பம் பெற்று, “கல்லூரிக் கல்வி இயக்குநர், ஈவெகி சம்பத் மாளிகை, கல்லூரி சாலை, சென்னை-6” என்ற முகவரிக்கு, வரும் ஜன. 29-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இதற்கு மாணவர்கள்கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பருக்குள் பிஎச்.டிபடிப்பில் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்முதுநிலைப் பட்டப்படிப்பு மற்றும் எம்.ஃபில்எழுத்துத் தேர்வில், 60 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்களாக இருக்க வேண்டும்யுஜிசி ஜேஆர்எஃப் தேர்வெழுதிதேர்ச்சி பெறாதவர்கள் இந்த உதவித் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் 120 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்மாதம் ரூ.5,000 வீதம்ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் வழங்கப்படும். 2019-ம் ஆண்டில் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க இயலாதுபகுதிநேர ஆய்வாளராக இருக்கக்கூடாதுவேறெந்த ஆராய்ச்சி நிதியும் பெறுவராக இருத்தல் கூடாது.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain