மத்திய கல்வி நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை

மத்திய கல்வி நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை

Scholarships for Central Educational Institution students

மத்திய
கல்வி நிறுவன மாணவர்களுக்கு உதவித்தொகை

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை வருகிற 4-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு சார்பாக வருடந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2020-21 ஆண்டிற்கான உதவித்தொகை வழங்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்:

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு 2020-21 ஆண்டிற்கான உதவித்தொகை ரூபாய் 2 லட்சம் வழங்கப்படுகிறதுஇந்த உதவித்தொகை தலா 100 மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறதுஇந்த உதவித்தொகை பெற விண்ணப்பித்த மாணவர்களின் குடும்ப வருமானம் 2 லட்சத்திற்கு அதிகமானதாக இருக்ககூடாதுஇந்த ஆண்டு புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அவர்கள் பயிலும் கல்லூரிகளிலேயே வழங்க வேண்டும்விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு அந்தந்த கல்லூரிகள் வருகிற ஜனவரி 4ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனுப்ப வேண்டும்அனுப்ப வேண்டிய முகவரிவிண்ணப்பங்களைப் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்எழிலகம் இணைப்புக் கட்டிடம், 2-வது தளம்சேப்பாக்கம்சென்னை 5 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்இது குறித்து விபரங்கள் அறிய 044-2855142 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain