தூத்துக்குடியி்ல் ஜன.14ல் கிராமியக் கலைப் பயிற்சி - ஆர்வமுள்ள கலைஞர்கள் தொடர்பு கொள்ளலாம்

தூத்துக்குடியி்ல் ஜன.14ல் கிராமியக் கலைப் பயிற்சி

Rural art training on Jan. 14 in Thoothukudi

தூத்துக்குடியி்ல்
ஜன.14ல் கிராமியக் கலைப் பயிற்சி

தூத்துக்குடியி்ல் வருகிற 14ம் தேதி பொங்கல் பண்டிகையன்று தமிழன்டா கலைக்கூடம் சார்பில் கிராமியக் கலைப் பயிற்சி நடைபெற உள்ளது.

தூத்துக்குடியில் வரும் தை பொங்கல் தினத்தன்று, 14ஆம் தேதி தமிழன்டா கலைக்கூடம் நடத்தும் தமிழ் கிராமியக்கலைப் பயிற்சி நடைபெற இருக்கிறது. தூத்துக்குடி சிதம்பர நகர் சந்தை வளாகத்தில் உள்ள தமிழன்டா கலைக்கூடத்தில் காலை 7 மணிக்கு தாரை தப்பட்டை முழங்கத்துடன் விழா தொடங்குகிறது.

சிலம்பாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம்,கோலாட்டம், களியலாட்டம், வீதி நாடகப் பயிற்சி, கரகம், காவடி போன்ற கிராமியக் கலைகள் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

சிலம்பு செல்வம்மேகலிங்கம் போன்றோர் பயிற்சி வழங்குகின்றனர்மாரி பறையாட்டம் கற்றுக்கொடுக்கிறார்சிலம்பம் கலையை மாரியப்பன்யோகா கலையை சுந்தரவேல்பாரம்பரிய கலையை பாக்ஸர் லெட்சுமண மூர்த்தி போன்ற பயிற்சியாளர்கள் கற்றுக்கொடுக்கின்றனர்.

அனைத்து பயிற்சிகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறதுமுன்பதிவு அவசியம்இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள கலைஞர்கள் – பயிற்சியாளர்கள் தமிழன்டா கலைக்கூடம் 97917 80068, 98650 97664 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain