நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த திட்டம்

நீட் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த திட்டம்

Plan to hold NEET exam twice a year

நீட்
தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த திட்டம்

நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்துவதற்கும், சுகாதாரத்துறையிடம் தேசிய தேர்வு முகமை அனுமதி கோரியுள்ளது.

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.

ஆண்டுதோறும் நாடு முழுவதும் நடைபெறும் நீட் தேர்வின் மூலம், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான இடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்தநிலையில் தேர்வு எழுதும் மாணவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, புதிய பரிந்துரை ஒன்றை தேசிய தேர்வு முகமை, மத்திய சுகாதாரத்துறைக்கு அளித்துள்ளது.

அதன்படி நீட் மருத்துவ நுழைவுத் தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுஇதன்மூலம் மாணவர்களின் சுமை குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுமேலும் நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்துவதற்கும்சுகாதாரத்துறையிடம் தேசிய தேர்வு முகமை அனுமதி கோரியுள்ளது.

இதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில்ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளதுஇந்நிலையில் ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வை நடத்தினால் சிரமத்தை குறைக்க முடியும் என மாணவர்களும் பெற்றோர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain