கேலி செய்பவனாயிருந்தால் நீயே தீமையைச் சுமப்பாய்

நீ கேலி செய்பவனாயிருந்தால் நீயே தீமையைச் சுமப்பாய்

 

If you are a mocker, you will bring evil on yourself

கேலி செய்பவனாயிருந்தால் நீயே தீமையைச் சுமப்பாய்

ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது. ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர் பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம், முதலாளி மூளையிருக்கா? என்று கேட்பான்.

அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான்.

இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்க வேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை. நாட்கள் நகர்ந்தன.

ஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பன் ஒருவன் அக்கடைக்கு வந்தான். அவனிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற, அட இவ்வளவு தானே, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினான் நண்பன்.

கடையை மூடப்போகும் சமயம், அத்திமிர்பிடித்தவன் வந்து, முதலாளியிடம், முதலாளி மூளையிருக்கா? என்று வழக்கம் போலக் கேட்டான்.

அதற்கு முதலாளியின் நண்பன் அவனைப் பார்த்து, இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உனக்குத்தான் இல்லை என்றான். திமிர்பிடித்தவனின் வாடிய முகத்தைப் பார்த்த கடை முதலாளி மகிழ்ச்சி அடைந்தார்.

கருத்து: நீ ஞானியாயிருந்தால் அது உனக்கே இலாபம். நீ கேலி செய்பவனாயிருந்தால் நீயே தீமையைச் சுமப்பாய்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain