இலவச சிலிண்டர்- யாருக்கெல்லாம் இலவசம்?

இலவச சிலிண்டர்- யாருக்கெல்லாம் இலவசம்?

Free cylinder- free for whom?

இலவச சிலிண்டர்- யாருக்கெல்லாம் இலவசம்?

மத்திய அரசு வழங்கும் இலவச சமையல் சிலிண்டரை வாங்குவது எப்படி?

வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் பெண்களுக்கு உதவுவதற்காக 2016 ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு 5 கோடி சமையல் சிலிண்டர் இணைப்புகள் வழங்கும் நோக்கத்தில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தில் மத்திய அரசு 8 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்து சுகாதாரமான எரிவாயு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு திட்டத்தை செயல்படுத்தியது.

யாருக்கெல்லாம் இலவசம்:

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த பெண்கள் ஏற்கனவே சமையல் சிலிண்டர் இணைப்பு இல்லாமல் இருக்கவேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்திய குடியுரிமை பெற்றிருக்க வேண்டும்.

பெண்ணின் பெயரிலேயே சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும். விண்ணப்பதாரர் வேறு எந்த சமையல் சிலிண்டர் திட்டத்தில் பயனாலியாக இருக்கக்கூடாது.

பட்டியல் வகுப்பு, பழங்குடியின குடும்பங்கள், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்.

காட்டுவாசிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தேயிலை, முன்னால் தேயிலை தோட்ட பழங்குடியினர், நதியோர தீவுகளில் வசிக்கும் மக்கள் ஆகிய 7 பிரிவுகளின் கீழ் பயனாளிகள் கண்டறியப்படுகின்றன.

என்னென்ன ஆவணங்கள்:

நகராட்சி தலைவர் அல்லது பஞ்சாயத்து தலைவர் வழங்கிய வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ஜாதி சான்றிதழ்.

ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டைரேஷன் அட்டைகுடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்கள்அண்மையில் எடுத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.

ஜாதி சான்றிதழ் உடன் முக்கிய ஆவணங்கள் விண்ணப்பதாரரின் ஒப்புதல் கடிதம்வங்கி கணக்கு மற்றும் வங்கி பாஸ்புக் ஆகிய ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

இலவச சமையல் சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மிகவும் அவசியம்.

முதல் முறையாக சிலிண்டர் இணைப்பு பெறும் போது அதற்கான தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

பின்னர் அவர் அதற்கான பணத்தை கொடுத்து சிலிண்டர் வாங்க வேண்டும்இந்த திட்டத்தின் கீழ் மூன்று சிலிண்டர்கள் மட்டுமே இலவசமாக வழங்கப்படும்ஒரு மாதத்திற்கு ஒரு சிலிண்டர் மட்டுமே வழங்க முடியும்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain