பயங்களும், சந்தேகங்களும் மற்றவரின் அன்பையும் நட்பையும் அடையத்தடையாக இருக்கக் கூடாது

பயங்களும், சந்தேகங்களும் மற்றவரின் அன்பையும் நட்பையும் அடையத்தடையாக இருக்கக் கூடாது

 

பயங்களும், சந்தேகங்களும் மற்றவரின் அன்பையும் நட்பையும் அடையத்தடையாக இருக்கக் கூடாது

ஒரு அபூர்வமான முனிவரிடம் ஒரு பெண் வந்து தன் கணவன் போருக்குப் போய் வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை என கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக்கொண்டாள்.

முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.

மறுநாளே, அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து திரும்பி வந்து விட்டாள்.

மறுநாள் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. ஆனால் இன்று பயம் சற்று குறைந்தது. ஆனாலும் திரும்பிவிட்டாள்.

அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்துவிட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது.

புலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார்.

அந்தப்பெண் மனம் குழம்பிப் போனாள்.

முனிவர் - இனி உனக்கு மூலிகை தேவையில்லை. புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படி பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கிவிட்டாய் அப்படி இருக்கும் போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா என்ன?

முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது. அங்கிருந்து தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள்.

கருத்து: பயங்களும், சந்தேகங்களும் மற்றவரின் அன்பையும் நட்பையும் அடையத்தடையாக இருக்கக் கூடாது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain