பிப்ரவரி 1 முதல் தட்கல் முறையில் சமையல் எரிவாயு சிலிண்டர் புக்கிங்

பிப்ரவரி 1 முதல் தட்கல் முறையில் சமையல் எரிவாயு சிலிண்டர் புக்கிங்

Booking gas cylinder booking in Tatkal mode from 1st February

பிப்ரவரி 1 முதல் தட்கல் முறையில் சமையல் எரிவாயு சிலிண்டர் புக்கிங்

வழக்கமான புக்கிங் முறை:

பொதுவாக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் காலியானதும் பொதுமக்கள் தங்களின் சமையல் எரிவாயு நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்து கொள்வார்கள். பதிவு செய்து மூன்று நாட்களில் புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் வந்துவிடும்.

தட்கல் புக்கிங் முறை:

ஆனால் ஒரே ஒரு எரிவாயு இணைப்பு மட்டுமே உள்ள பொது மக்கள் புதிய சிலிண்டர் வரும் வரை சற்று சிரமத்திற்கு உள்ளாகும் நிலையில் தவித்து வந்தனர். இதனை கருத்தில் கொண்ட எரிவாயு நிறுவனம் பதிவு செய்த அரைமணி நேரத்தில் புதிய சிலிண்டரை பெறும் வகையில் புதிதாக தட்கல் முறையினை அறிமுகம் செய்ய உள்ளது.

தட்கல் LPG சேவா:

தட்கல் LPG சேவா முறையில் வாடிக்கையாளர் பதிவு செய்த அரைமணி நேரத்தில் புதிய எரிவாயு சிலிண்டர் வந்துவிடும். ஆனால் வாடிக்கையாளர்கள் இதற்காக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும் மற்றும் இந்த புதிய முறை வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் அமல்படுத்த இருப்பதாகவும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain