ஜேஇஇ தேர்விற்கு இலவச ஆன்லைன் பயிற்சிக்காக 6000 மாணவர்கள் பதிவு

ஜேஇஇ தேர்விற்கு இலவச ஆன்லைன் பயிற்சிக்காக 6000 மாணவர்கள் பதிவு

6000 students enroll for free online training for JEE exam

ஜேஇஇ
தேர்விற்கு இலவச ஆன்லைன் பயிற்சிக்காக 6000 மாணவர்கள் பதிவு

தமிழகத்தில் 11 மற்றும் 12வது வகுப்பில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஜேஇஇ தேர்விற்கான இலவச பயிற்சி முகாம் ஆன்லைன் மூலம் வழங்கப்பட உள்ள நிலையில் இதற்காக 6,000 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

இந்தியாவில் உள்ள என்ஐடி மற்றும் ஐஐடி உட்பட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் பட்ட படிப்பிற்கு சேர்வதற்கு ஜேஇஇ நுழைவுத்தேர்வு அவசியமாகும். ஜேஇஇ நுழைவுத்தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் தரவரிசை பட்டியலில் இருந்து தான் பொறியியல் படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

ஜேஇஇ நுழைவுத்தேர்வு வினாத்தாள்கள் மத்திய அரசு பாடத்திட்டத்தின் படி தான் அமைக்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் இந்த தேர்வில் அதிக அளவில் மதிப்பெண்கள் பெற முடியாமல் நுழைவு தேர்வு நிலையிலேயே மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சேர முடியாமல் வாய்ப்பை இழந்தனர். இதனை கருத்தில் கொண்டு மாநில அரசு, மத்திய அரசின் நுழைவுத்தேர்வுகளுக்கு தமிழக மாணவர்களை ஆயத்தப்படுத்தும் விதமாக நீட் மற்றும் ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.

அரசின் இலவச பயிற்சி வகுப்புகள் பொதுவாக பள்ளிகளிலேயே நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா நோய்ப்பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டிற்கான நுழைவுத்தேர்வு பயிற்சிகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்படுகிறது.

ஆன்லைன் முறை ஜேஇஇ நுழைவுத்தேர்வு பயிற்சிக்காக பள்ளிக்கல்வித்துறை டில்லியை சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதுஇதனால் கணிதம்இயற்பியல்வேதியியல் ஆகிய பாடங்களுக்கு மட்டும் பயிற்சி வகுப்புகள் ஜனவரி 4ம் தேதி முதல் நடத்தப்பட இருக்கிறது.

இந்த பயிற்சிக்காக இதுவரை 6,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்மேலும் விருப்பமுள்ள மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் மூலம் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain