பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பணப்பயன்கள் பெற விண்ணப்பிக்கலாம் (ஒரு பெண் குழந்தைக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 2 பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம்)-திருவள்ளுர்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பணப்பயன்கள் பெற விண்ணப்பிக்கலாம் (ஒரு பெண் குழந்தைக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 2 பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம்)-த

You can apply for cash benefits under the Girl Child Protection Scheme (Rs. 25,000 per girl child and Rs. 50 thousand for 2 girls) - Tiruvallur

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பணப்பயன்கள் பெற விண்ணப்பிக்கலாம் (ஒரு பெண் குழந்தைக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 2 பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம்)-திருவள்ளுர்

சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழக அரசின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ஒரு பெண் குழந்தைக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 2 பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் பயனடைய, சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் சமூக நலத்துறை பணியாளர்களிடம் கீழ்காணும் ஆவணங்களை அளித்து -சேவை மையத்தில் பதிவு செய்து இத்திட்டத்தின் பணப்பயன்களை பெறலாம்.

சேமிப்பு பத்திரம் பெறுவதற்கு அளிக்க வேண்டிய ஆவணங்கள்:

திட்டம் 1: குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள நிலையில் பிறந்த 3 வயதிற்குள் பதிவு செய்ய வேண்டும்.

திட்டம் 2: குடும்பத்தில் முதல் பெண் குழந்தை பிறந்த பிறகு, 2 வது பெண் குழந்தை பிறந்த 3 வயதிற்குள் பதிவு செய்ய வேண்டும்.

குழந்தைகளின் தாய்க்கு 35 வயதிற்குள் குடும்ப அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.

மருத்துவ சான்று இணைக்கப்பட வேண்டும் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

திருவள்ளுர் மாவட்டத்தில் 10 ஆண்டுகளாக வசித்தவராக இருத்தல் வேண்டும்பிறப்பிட சான்று குழந்தைகளின் தாய் மற்றும் தந்தையின் வயது சான்றுகுடும்ப அட்டைகுடும்ப புகைப்படம்திருமணபத்திரிகைஜாதி சான்றுஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்றுகுழந்தைகளின் பிறப்பு சான்று ஆகியவை சேமிப்பு பத்திரம் பெறுவதற்கு அளிக்க வேண்டிய ஆவணங்கள்

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain