2017-18ல் வழங்கப்படாத மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி

2017-18ல் வழங்கப்படாத மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி

Laptops soon for students not delivered in 2017-18

2017-18ல் வழங்கப்படாத மாணவர்களுக்கு விரைவில் மடிக்கணினி

கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

போக்குவரத்து துறை அமைச்சர் சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:

மாவட்டத்தில், 2016 முதல், 2020 வரை, 22 ஆயிரத்து, 197 மாணவ மாணவியருக்கு, 8.28 கோடி ரூபாய் மதிப்பில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், 6,986 மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்க, 2.75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. 'நீட்' போன்ற மத்திய அரசின் எந்தவொரு நுழைவுத்தேர்வையும், எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்து, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காலம் என்பதால், ஆன்லைன் மூலமாக வகுப்புகளில் கலந்துகொள்ளும் சூழல் நிலவுவதை கருத்தில் கொண்டு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு, ஒரு நாளைக்கு, 2 ஜி.பி., வீதம் இலவச இணையதள வசதி வழங்கப்படும். மேலும், 2017-18ம் ஆண்டு மடிக்கணினி வழங்கப்படாத மாணவ, மாணவியருக்கு, விரைவில் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain