வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

Students whose income does not exceed Rs 2 lakh can apply for the scholarship

வருமானம்
2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவர்கள் அனைவரும் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி, மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு, மேற்படிப்பு படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு இரண்டு லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாணவர்கள் அனைவரும் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

புதிதாக கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மணிமாறனை அல்லது அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெறலாம்.

இக்கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கத்தின், இயக்குநர் அலுவலகத்திற்கு வரும் பிப்.15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain