ஜனவரி 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

ஜனவரி 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

Schools to reopen on January 19 - Government of Tamil Nadu announces

தமிழகத்தில் 19-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மாணவர்களின் வருங்கால நலனை கருத்தில் கொண்டு, வரும் 19.1.2021 முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்.

பள்ளிகள் திறக்கப்படும் போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும் அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.

அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

OFFICIAL NOTICE:


        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain