எஸ்சி & எஸ்டி மாணவர்களின் முழு கல்விக்கட்டணம் அரசு ஏற்பு

எஸ்சி & எஸ்டி மாணவர்களின் முழு கல்விக்கட்டணம் அரசு ஏற்பு

Government acceptance of full tuition fees for SC & ST students

எஸ்சி
& எஸ்டி மாணவர்களின் முழு கல்விக்கட்டணம் அரசு ஏற்பு

புதுச்சேரி ஆதி திராவிடர் நலன்மற்றும் பட்டியல் பழங்குடியினர் நலத்துறை ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி முழு கல்விக் கட்டணத்தையும் நடப்பு கல்வியாண்டு முதல் அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு சார்பில் தலித் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 4 மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 4 கோடி தலித் மாணவர்களுக்கு ரூ.59 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையில் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் அவர்களுக்கான கல்விக்கட்டணத்தை செலுத்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ்தகுதியான எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்களுக்கு கல்வி கட்டணம்தேர்வுக் கட்டணம்ஆய்வக கட்டணம்புத்தகக் கட்டணம்பஸ் கட்டணம்தவிர நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பிற கட்டணங்கள் அனைத்தும் அரசு சார்பில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களின் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்ட பின்இதற்கான ஆணை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டதுகவர்னர் கிரண் பேடி டிசம்பர் 30ம் தேதி இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்இதன் மூலம் 6,777 எஸ்.டிமற்றும் எஸ்.டி மாணவர்கள் பயன்பெறுவர்இதற்காக ஆண்டுக்கு 42 கோடி ரூபாய் செலவிட திட்டமிடப்பட்டு உள்ளது.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain