தொழில் முனைவோர் கடன் திட்டத்தை இளையோர் பயன்படுத்தி கொள்ளலாம்

தொழில் முனைவோர் கடன் திட்டத்தை இளையோர் பயன்படுத்தி கொள்ளலாம்
Young people can take advantage of the entrepreneurship loan scheme


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

தருமபுரி மாவட்ட தொழில் மையத்தின், வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை இளையோர் பயன்படுத்து மாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

படித்த வேலை வாய்ப்பற்ற இளையோருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன் தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்தி வரு கிறது.

சொந்த ஊரிலேயே குறு, சிறு உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் தொடங்க வழி ஏற்படுத்திக் கொடுத்தல், வேலை வாய்ப்புக்காக இடம் பெயர்தலை தவிர்த்தல், வறுமைக் கோட்டில் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வாய்ப்பு ஏற்படுத்தித் தருதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.

இந்த திட்ட மதிப்பீடு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. நகர, ஊரகம் என அனைத்து பகுதிகளைச் சேர்ந்த வேலை வாய்ப்பற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உற்பத்தி தொழில்களுக்கு ரூ.10 லட்சம் அதிகபட்ச தொகையாக இருந்தது. இது ரூ.15 லட்சமாக மாற்றியமைக்கப் பட்டுள்ளது. சேவை தொழில்கள், வியாபாரத் தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.

மானியத் தொகை மதிப்பீட்டில் 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் என்பது தற்போது அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் என உயர்த்தப்பட்டுள்ளது.

18 வயது நிரம்பிய, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருக்கும் இளையோர் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற விண்ணப் பிக்கலாம்.

பொது பிரிவினர் 35 வயதுக்குள்ளும்சிறப்புப் பிரிவினர் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்தொழில் முனைவோர் பங்களிப்பாக பொதுப் பிரிவினர் திட்ட முதலீட்டில் 10 சதவீத தொகையையும்ஆதி திராவிடர்பழங்குடியினர்பின் தங்கிய மற்றும் மிகவும் பின் தங்கிய வகுப்பினர்சிறு பான்மையினர்பெண்கள்முன்னாள் ராணுவத்தினர்மாற்றுத் திறனாளிகள்திருநங்கைகள் ஆகியோர் திட்ட முதலீட்டில் 5 சதவீத தொகையையும் வங்கியில் செலுத்த வேண்டும்.

2020-21-ம் ஆண்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.msmeonline.tn.gov/in/uyegp என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

இத் திட்டத்தின் கீழ் வங்கிக் கடனுக்கு அனுமதிக்கப் படுவோர் தொழில் முனைவோர் மேம் பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய 7 நாள் பயிற்சிக்கு கரோனா தொற்று காரணமாக நடப்பு ஆண்டில் விலக்கு அளிக்கப்படுகிறது.

கூடுதல் விவரங்கள் அறிய மாவட்ட தொழில் மையம்சிட்கோ தொழிற்பேட்டைசேலம் மெயின் ரோடுதருமபுரி-636 705 என்ற முகவரியில் அல்லது 04342-230892 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain