சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி பல்வேறு போட்டிகள்

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி பல்வேறு போட்டிகள்

Various competitions on the occasion of Swami Vivekananda's birthday

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி பல்வேறு போட்டிகள்

செங்கல்பட்டு கலெக்டர் விடுத்துள்ள அறிக்கை:

மத்திய அரசு இளைஞர்களின் திறமையை மேம்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12ம் தேதி தேசிய இளைஞர் விழா கொண்டாடுகிறது.

இதையொட்டி, மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதற்காக நியமிக்கப்பட்ட குழுவினர் மூலம் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த மாவட்ட தேர்வு போட்டிகளில் தனிநபர் பிரிவில் 11, குழு பிரிவில் 7 என நடக்கும். பாரம்பரிய இசை, நடனம், உடை அலங்காரம், நாடகம், காட்சி கலைகள், எழுத்தாற்றல் ஆகியவை உள்ளடக்கியது.

வரும் 31ம் தேதியன்று 15 முதல் 29 வயது நிரம்பிய மாணவ, மாணவிகள், மாணவர் அல்லாதவர்கள் (ஆண், பெண்) கலந்து கொள்ளலாம்.

மத்திய அரசு வழிகாட்டுதல்படிகொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டுபோட்டிகள் நடத்தப்படும்மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிபெறுவோர்மாநில அளவிலான போட்டிகளிலும்மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிபெறுவோர்தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்மாவட்ட அளவில் வரும் 29, 30 ஆகிய தேதிகளிலும்மாநில அளவில் ஜனவரி 5 முதல் 8 வரையும்தேசிய அளவில்ஜனவரி 12 முதல் 19 வரையும் போட்டிகள் நடக்கும்.

போட்டி முடிவுகளை அந்தந்த மாவட்ட நடுவர்கள் தீர்மானிப்பர்போட்டியாளர்கள் தங்களுக்கு தேவையான உபகரணங்களை எடுத்து வர வேண்டும்மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை அலுவலக நேரங்களில் 7401703481 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain