அளவோடு சம்பாதித்தால் மனநிம்மதியுடன் இருக்கலாம்

அளவோடு சம்பாதித்தால் மனநிம்மதியுடன் இருக்கலாம்
Earning with moderation can be reassuring


அளவோடு சம்பாதித்தால் மனநிம்மதியுடன் இருக்கலாம்

ஒரு ஊரில் வியாபாரி இருந்தான். அவன் நன்றாக உழைத்து பணத்தைச் சேர்த்தான். அதனால் அவனுக்கு பண ஆசை அதிகரித்து மன நிம்மதி போய்விட்டது.

ஒருநாள் இரவு திடீரென்று அவனுக்கு ஓர் யோசனை தோன்றியது. சன்யாசியாகி விட்டால் மன நிம்மதி கிடைக்கும் என்று முடிவெடுத்தான்.

மறுநாளே, தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிக் கொண்டு ஊரைவிட்டு காட்டுக்கு வந்தான்.

அங்கே ஒரு சன்யாசி தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் பல சிஷ்யர்கள் தொண்டு செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்து வியாபாரி, அந்த குருவை வணங்கி, சாமி நான் ஒரு வியாபாரி சம்பாதிக்க சம்பாதிக்க பண ஆசை நாளுக்கு நாள் அதிகரித்தது.

மன நிம்மதி போய்விட்டது. நான் சேர்த்த பணமூட்டையை பெற்றுக் கொண்டு என்னையும் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பணிவாகக் கேட்டான்.

அவன் கீழே வைத்த பணமூட்டையை, அந்தக் குரு எடுத்துக் கொண்டு, திடீரென்று ஓட ஆரம்பித்தார். வியாபாரிக்கு ஒன்றும் புரியவில்லை அவனும் அவருக்குப் பின்னே ஓடினான். அவன் தன் பின்னால் ஓடிவருவதைக் கவனித்த குரு, இன்னும் வேகமாக ஓட ஆரம்பித்தார். வியாபாரியும் அய்யோ, என் பணமூட்டை...  என்று கத்திக் கொண்டே அவர் பின்னால் ஓடினான்.

குரு பணமூட்டையுடன் வெகுதூரம் சென்றுவிட்டுபிறகு மீண்டும் அவரது இடத்திற்கே வந்து பணமூட்டையை அதே இடத்தில் வைத்துவிட்டுமீண்டும் சலனமில்லாமல் அமர்ந்து கொண்டார்.

நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வியாபாரியும் குருவிடம் வந்தான்தனது பணமூட்டை இருப்பதைப் பார்த்து குழம்பிப்போனான்.

குரு அவனைப் பார்த்து மகனேஇன்னும் பண ஆசை உன்னைவிட்டுப் போகவில்லை அதனால் நீ மீண்டும் வியாபாரம் செய்எனது ஆசிரமத்தில் உனக்கு இப்போதைக்கு இடமில்லை சென்று வா... என்று சாந்தமாக உபதேசம் செய்தார்வியாபாரி தனது பணமூட்டையுடன் ஊர் திரும்பினான்.

கருத்து: அளவோடு சம்பாதித்தால் மனநிம்மதியுடன் இருக்கலாம்


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

Check Related Post:

      Post a Comment

      © Daily News. All rights reserved. Developed by Jago Desain