மத்திய பல்கலைக்கழக பட்ட படிப்புகளுக்கு ஒரே பொதுவான நுழைவுத் தேர்வு

மத்திய பல்கலைக்கழக பட்ட படிப்புகளுக்கு ஒரே பொதுவான நுழைவுத் தேர்வு

The only common entrance exam for Central University degree courses

மத்திய
பல்கலைக்கழக பட்ட படிப்புகளுக்கு ஒரே பொதுவான நுழைவுத் தேர்வு

மத்திய பல்கலைக்கழக பட்ட படிப்புகளுக்கு ஒரே பொதுவான நுழைவுத் தேர்வு வரும் கல்வியாண்டு முதல் நடத்த இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு முடித்து விட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்கு சேர விரும்பும் மாணவர்கள் தற்போது வரை கட் ஆப் மதிப்பெண் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இந்த முறையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 90 சதவீதம் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் கூட மத்திய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் இடம் பெற முடியாத நிலை நீடித்து வந்தது.

இந்த கட் ஆப் மார்க் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக மத்திய அரசு ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்ததுஅனைத்து தரப்பிற்கும் சரியான சூழ்நிலையை ஆராய்வதற்காக இந்த குழு அமைக்கபப்ட்டது.

இது சம்பந்தமாக ஆராய்ந்து முடிவை பரிந்துரைக்கும் படி மத்திய அரசு உத்தரவிட்டதுஇந்நிலையில் இந்தக்குழு தனது முடிவை இன்னும் ஒரு மாதத்திற்குள் மத்திய அரசிடம் தெரிவிக்க உள்ளது.

இக்குழுவினர் வரும் கல்வியாண்டு முதல் பல்கலைக்கழக பட்டப் படிப்பிற்க்கு ஒரே நுழைவுத் தேர்வு முறையை பரிந்துரைக்க உள்ளதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்இம்முறையினால் 60 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் கூட பல்கலைக்கழகத்தின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

Check Related Post:

      Post a Comment

      © Daily News. All rights reserved. Developed by Jago Desain