மணத்தக்காளி வத்தல் குழம்பு

மணத்தக்காளி வத்தல் குழம்பு
Manathakkali Vaththal Kuzhambu


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

மணத்தக்காளி வத்தல் குழம்பு

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 100 கிராம்

மணத்தக்காளி வற்றல் - 50 கிராம்

பூண்டு - 10 பல்

புளி - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

கருவேப்பிலை - தேவையான அளவு

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மல்லித் தூள் - 3 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரைடீஸ்பூன்

தேங்காய் - சிறிய துண்டு

மிளகு - 10

சீரகம் - அரை டீஸ்பூன்

தக்காளி - 1

நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன்

கடுகு - சிறிதளவு

வெந்தயம் - சிறிதளவு

மணத்தக்காளி வத்தல் குழம்பு செய்முறை:

சின்ன பூண்டு வெங்காயத்தை எடுத்து பூண்டினை தோலுரித்து வைக்கவும். பின்பு தேங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். மிக்ஸி ஜாரில் நறுக்கிய தேங்காய், மிளகு, சீரகம், சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்துஎண்ணெயை ஊற்றி காய்ந்ததும்அதில் கடுகுவெந்தயம்கருவேப்பிலைபோட்டு தாளித்ததும்அதனுடன் வத்தலை இரண்டாக கிள்ளி போட்டு நன்கு வதக்கவும்.

மேலும் அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம்பூண்டுதக்காளி போட்டு வதக்கி கொள்ளவும்பின்னர் அதில் மிளகாய்த்தூள்மல்லித் தூள்மஞ்சள் தூள் தூவி நன்கு வதக்கவும்.

இறுதியில் அதனுடன் புளியை கரைத்து ஊற்றிஅரைத்த கலவையை போட்டு நன்கு கொதிக்க வைக்கவும்கெட்டியானதும் இறக்கி பரிமாறினால் மணத்தக்காளி வத்தல் குழம்பு தயார்.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

Check Related Post:

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain