நாடு முழுவதும் நெடுஞ்சாலை திட்டங்களில் பொறியியல் மாணவர்களை பங்கேற்க வைக்க புதிய திட்டம்

நாடு முழுவதும் நெடுஞ்சாலை திட்டங்களில் பொறியியல் மாணவர்களை பங்கேற்க வைக்க புதிய திட்டம்
New project to get engineering students involved in highway projects across the country


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

நாடு முழுவதும் நெடுஞ்சாலை திட்டங்களில் பொறியியல் மாணவர்களை பங்கேற்க வைக்க புதிய திட்டம்

உயர் கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறையினருக்கும் இடையே புதிய இணைப்பை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு புதிய திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது.

மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியா போன்ற நாடுகளில் சாலை மேம்பாடு, நாட்டைவளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும். அதன்படி, தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை தங்களுடன் இணைக்கும் புதிய திட்டத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் சிவில், நெடுஞ்சாலை பொறியியல் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பும் அதிகமாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைத் திட்டங்களில் பங்கேற்கும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் சாலை மேம்பாட்டுத் திட்டங்களை ஆய்வு செய்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க முடியும்.

இந்நிலையில், சாலைகள் அமைக்கும் திட்டங்களில் நெடுஞ்சாலை ஆணையத்துடன் இணைந்து தன்னார்வ அடிப்படையில் நாடு முழுவதும் உள்ளஐஐடி-கள், என்ஐடி மற்றும் பொறியியல் கல்லூரிகள் இணைந்து வருகின்றன.

கல்வி நிறுவனங்கள் தெரிவிக்கும் தொழில்நுட்ப ஆலோசனையின்படி, அருகில் உள்ளதேசிய நெடுஞ்சாலைகளில் சாலைகள் அமைக்கப்படுகின்றன. இந்தச் சாலைகள் அந்தந்த நிறுவனங்களின் நவீன தொழில்நுட்ப ஆய்வுகளுக்கும் பயன்படுத்தலாம்.

ஊக்கத் தொகையுடன் பயிற்சி

மேலும்தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சாலை தொழில்நுட்பங்கள் குறித்து ஆண்டுக்கு 20 இளநிலை மற்றும் 20 முதுநிலை மாணவர்களுக்கு உள்ளிருப்பு பயிற்சியை 2 மாதங்களுக்கு வழங்கவுள்ளதுஇதில்பங்கேற்கும் இளநிலை மாணவர்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரமும்முதுநிலை மாணவர்களுக்கு ரூ.15 ஆயிரமும் உதவித் தொகைவழங்கப்படவுள்ளதுகூடுதல் தகவல்களை www.nhai.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

தங்களின் கல்வி நிறுவனம் அருகே நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தில் இதுவரை 18 ஐஐடிகளும், 26 என்ஐடிகளும், 190 பொறியியல் கல்லூரிகளும் இணைந்துள்ளன.

இதுவரை 200 கல்வி நிறுவனங்கள் ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளனநாடு முழுவதும் இந்தத் திட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain