சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்

சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்

சுண்டைக்காயில் அதிக அளவில் புரதம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. உடல் சோர்வினை நீக்கும்.

வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். பெண்கள் பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலம்பெறும்.

சுண்டைக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி, உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.

முற்றிய சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து, வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். தினமும் எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம் அல்லது வற்றல் குழம்பாக்கி சாப்பிடலாம்.

மார்புச்சளியை சரிசெய்யும். சுண்டைக்காய் வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடல் சோர்வு, வயிற்றுப்பொருமல் ஆகியவை நீங்கும்.

சுண்டைக்காய் வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் மூன்று வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள் மற்றும் மூலம் குணமாகும்.


சுண்டைக்காயை உலர்த்திப் பொடியாக்கி சூரணம் செய்துநீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும்மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும்வயிற்றுப்புண் ஆறும்வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.

சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டுசின்ன வெங்காயம்மிளகுசீரகம்கறிவேப்பிலைகொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டுஇருமல்மூலச்சூடுமூலக்கடுப்புமூலத்தில் இரத்தம் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

நாட்டுச் சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்பதன் மூலம் நுண்புழுவால் உண்டான நோய்களை குணப்படுத்தும் மற்றும் அஜீரணக் கோளாறுகளை நீக்கும்.

அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்யலாம்.

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain