மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் ஸ்மார்ட் செல்போன் வழங்கப்பட உள்ளது

மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் ஸ்மார்ட் செல்போன் வழங்கப்பட உள்ளது

The government is to provide smart cell phones to the disabled

மாற்றுத்
திறனாளிகளுக்கு அரசு சார்பில் ஸ்மார்ட் செல்போன் வழங்கப்பட உள்ளது

திருவாரூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அரசின் ஸ்மார்ட் செல்போன் பெற விண்ணப்பிக்குமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

தமிழக முதல்வரின் உத்தரவுப்படி திருவாரூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட காது கேளாத, வாய் பேச முடியாத மற்றும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு சார்பில் ஸ்மார்ட் செல்போன் வழங்கப்பட உள்ளது.

இதனையொட்டி கல்லூரி மாணவர்கள்சுயதொழில் புரிவோர் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மேற்கண்ட காது கேளாதவாய் பேசாத மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டை மற்றும் மருத்துவ சான்றிதழ்ஆதார் அட்டை ஆகிய நகல்கள் மற்றும் கல்வி பயிலும் நிறுவனங்கள் சான்றிதழ் மற்றும் சுய தொழில் புரிவோர்தனியார் நிறுவன பணியாளர்கள் என்பதற்கான சான்றிதழ் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain