அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் 168-ஆவது ஜயந்தி விழாவையொட்டி, இணையவழி போட்டிகள்

அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் 168-ஆவது ஜயந்தி விழாவையொட்டி, இணையவழி போட்டிகள்
Online competitions on the occasion of the 168th Jayanti of Mother Sri Sharda Devi


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

அன்னை ஸ்ரீ சாரதா தேவியின் 168-ஆவது ஜயந்தி விழாவையொட்டி, இணையவழி போட்டிகளை ஸ்ரீராமகிருஷ்ண மடம் நடத்துகிறது.

இப்போட்டிகளை, அன்னை ஸ்ரீ சாரதா தேவியாரின் பிறந்த தலமான மேற்கு வங்க மாநிலம், ஜெய்ராம்பாடியிலிருந்து, உலகளாவிய ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனின் துணைத் தலைவா் சுவாமி கௌதமானந்த மஹராஜ் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து ஸ்ரீராமகிருஷ்ண மடம்-தஞ்சாவூா் கிளையின் தலைவா் சுவாமி விமூா்த்தானந்தா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இப்போட்டியில் அன்னை ஸ்ரீ சாரதா தேவியிடம் என் பிரார்த்தனை, என் வாழ்வில் நான் பின்பற்றும் அன்னையின் ஓா் உபதேசம், இதனால்தான் சாரதாம்மாவை எனக்குப் பிடிக்கும் - என் அனுபவம், எனது கஷ்டமான நேரத்தில் ஸ்ரீ சாரதை என்னை எப்படி காப்பாற்றினார்?, பிறரது குறை காணாதே உன் மன அமைதி நிலைக்கும், தாய் ஒருத்தி நான் எப்போதும் உனக்காக இருக்கிறேன், கடிகாரம் துடிப்பது போல் உன் இதயம் இைாமத்தால் துடித்தால் உனக்கு ஆன்மீகத்தில் வெற்றி நிச்சயம், அன்பால் உலகை உனதாக்கிக் கொள் என அன்னை சாரதாதேவி குறித்த 8 தலைப்புகளில் தமிழிலோ, ஆங்கிலத்திலோ கட்டுரை அல்லது விடியோவில் சுருக்கமாகப் பதிவு செய்து அனுப்பலாம்.

படைப்பாற்றல் மிக்க கட்டுரைகளுக்கும், நற்சிந்தனையை வெளிப்படுத்தும் பேச்சுகளுக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

படைப்புகள் சொந்த அனுபவத்தில் உருவானதாக, கற்பனை இல்லாமல் இருக்க வேண்டும். கட்டுரைகள் 700 வார்த்தைகளுக்கு மிகாமல் PDF வடிவில் பதிவேற்றம் செய்யவும், உரைகள் 3 முதல் 6 நிமிஷங்கள்வரை இருக்க வேண்டும். விடியோக்கள் MP4 வடிவிலும், ஆடியோக்கள் MP3 வடிவிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும்


சிறந்த படைப்புகள் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழிலும் மடத்து இணையத்திலும் வெளியிடப்படும். படைப்புகள் அனுப்ப கடைசித் தேதி டிச.15. தோவு செய்யப்படும் படைப்புகள், உரைகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். படைப்புகளை https://bitly.ws/aFNG என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் தகவல்களுக்கு 96266 05838, 90434 48963, 98409 87307 எண்களில் தொடா்பு கொள்ளலாம்.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain