தானத்தில் சிறந்தவர் கர்ணனே!!

தானத்தில் சிறந்தவர் கர்ணனே!!
Karna is the best in charity !!


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

தானத்தில் சிறந்தவர் கர்ணனே!!

பாண்டவர்களுக்கு ரொம்ப நாட்களாகவே நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர். ஆனால் கர்ணனையே ஏன் எல்லோரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்ற சந்தேகம் இருந்தது.

இவர்களின் சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன், ஒரு நாள் தங்கமலை, வெள்ளிமலை என இரு மலைகளை உருவாக்கி பாண்டவர்களை அழைத்து இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன் என்றார்.

பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத்தர, தர்மர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார்.

தானம் செய்ய செய்ய அவ்விரு மலைகளும் வளர்ந்து கொண்டே இருந்தன. தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. மாலைப்பொழுது வந்ததும் எங்களால் முடியாது கண்ணா என்று தன் தோல்வியை ஒப்புக்கொண்டார் தருமர்.

உடனே கிருஷ்ணன் கர்ணனை வரவழைத்து கர்ணா.. இதோபார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்கமலை. மற்றொன்று வெள்ளிமலை. இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும்.

பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப்பொழுதே உள்ளதுஉன்னால் முடியுமாஎன்று கேட்டார்உடனே கர்ணன்இதில் யோசிக்க என்ன இருக்கிறதுஇப்போதே செய்து காட்டுகிறேன் என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்துநீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறி தனது தர்மத்தை முடித்துவிட்டுக் கிளம்பினான்.

பாண்டவர்கள் அசந்து போயினர்அவர்களை ஒரு அர்த்தப்பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன்தர்மருக்கும் பரந்த மனசுதான்அதை யாரும் மறுக்க முடியாது.

ஆனால்அவரைக்காட்டிலும் தானதருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதால் தானத்தில் சிறந்தவர் கர்ணனே என்று பாண்டவர்களுக்கு உணர்த்தினார் கிருஷ்ணன்.

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

Check Related Post:

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain