சிறுத்தையின் ஏமாற்றம்

சிறுத்தையின் ஏமாற்றம்
Disappointment of the leopard


சிறுத்தையின் ஏமாற்றம்

ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு கருப்பு மானையும், ஒரு புள்ளி மானையும் பார்த்து, மலையடிவாரத்திற்குச் சென்றது.

பின், எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யும் நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்திற்கு வந்து வெவ்வேறு பாதைகளில் ஓடின.

சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. எதைத் துரத்தலாம் என்று யோசித்து பிறகு, கருப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும் என்று கருப்பு மானைத் துரத்தத் தொடங்கியது.

ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போனதுஉடனே சிறுத்தை அது வேகமாக ஓடக் கூடிய மான்அதைப் பிடிக்க முடியாதுபசி வேறு அதிகமாகிவிட்டதுபுள்ளி மானைப் பிடிக்கலாம் என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது.

ஆனால் புள்ளிமானும் பஞ்சாய் பறந்துவிட்டிருந்ததுஇரண்டையும் பிடிக்கமுடியாமல் சோர்ந்து போன சிறுத்தைபசி மயக்கத்தில் மயங்கி விழுந்தது.

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

Check Related Post:

      Post a Comment

      © Daily News. All rights reserved. Developed by Jago Desain