இணையவழியில் அறிவியல் திருவிழா-பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழும் ரொக்கப் பரிசுகளும் மின் புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன

இணையவழியில் அறிவியல் திருவிழா-பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழும் ரொக்கப் பரிசுகளும் மின் புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன
Certificates, cash prizes and e-books are to be given out to all science festival-participants online


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

இணையவழியில் அறிவியல் திருவிழா-பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழும் ரொக்கப் பரிசுகளும் மின் புத்தகங்களும் வழங்கப்பட உள்ளன

இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவானது, அறிவியலை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட தனித்துவமான அம்சங்களைக் கொண்ட நிகழ்வாகும்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் விஞ்ஞான பாரதி இணைந்து நடத்தி வருகிறது.

அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சிகள் பற்றி அறிந்துகொள்ளப் பள்ளி மாணவர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை அனைவரும் ஒரே இடத்தில் சந்திக்கின்ற மிகப்பெரும் அறிவியல் திருவிழாவாக இது விளங்கி வருகிறது.

இந்தப் பேரிடர் காலகட்டத்தில் அறிவியல் திருவிழா இந்த ஆண்டு டிசம்பர் 22 முதல் 25ஆம் தேதி வரை நான்கு நாட்கள் இணையவழியில் நடைபெற உள்ளது.

இந்த வருடம் 35க்கும் மேற்பட்ட பல்வேறு நிகழ்வுகள் இந்த அறிவியல் திருவிழாவில் நடைபெற உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கிராமம், கட்டுரை எழுதும் போட்டி, செயல்திட்டத்தைச் சமர்ப்பிக்கும் போட்டி போன்ற நிகழ்வுகளும், பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவியல் கட்டுரைகள் எழுதுதல், அறிவியல் கருத்தரங்குகள் போன்ற நிகழ்வுகளும், கல்லூரி மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானிக் கருத்தரங்கு உள்ளிட்ட பல சிறப்பு நிகழ்வுகளும் சர்வதேச அறிவியல் திருவிழாவில் நடைபெற உள்ளன.

குறிப்பாகப் பள்ளி மாணவர்களுக்கானஅறிவியல் கிராமம்என்ற நிகழ்வில் 5 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் பங்கேற்க முடியும். அதைத் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும் போட்டியானது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நடைபெற உள்ளது. கட்டுரைப் போட்டியின் தலைப்பு: அறிவியல் எவ்வாறு கற்பிக்கப்படவேண்டும்?

நான்கு பிரிவுகள்

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் (முதல் பரிசு ரூ.5000, இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000)

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் (முதல் பரிசு ரூ.7000, இரண்டாம் பரிசு ரூ.5000, மூன்றாம் பரிசு ரூ.3000)

இளநிலைமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் (முதல் பரிசு ரூ.7000, இரண்டாம் பரிசு ரூ.5000, மூன்றாம் பரிசு ரூ.3000)

ஆய்வுகள் மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் (முதல் பரிசு ரூ.7000, இரண்டாம் பரிசு ரூ.5000, மூன்றாம் பரிசு ரூ.3000) கட்டுரை 600 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


போட்டியில் பங்கேற்க:

www.scienceindiafest.org இணையதளத்தில் IISF.ல் (இந்தியா சர்வதேச அறிவியல் திருவிழாஉங்கள் பெயரைப் பதிவு செய்யவும்நிகழ்வுகள் பதிவுப் பக்கத்தில் உங்கள் ஆதாரச் சான்றுகளோடு உள்நுழையவும்டேஷ்போர்டில், 41 நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.

அதில் இந்தியாவில் அறிவியல் கல்வியைத் தேர்ந்தெடுத்து உங்கள் கட்டுரையைச் சமர்ப்பிக்கவும்.

கடைசி தேதி: 15 டிசம்பர் 2020. பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழும் ரொக்கப் பரிசுகளும் மின் புத்தகங்களும் வழங்கப்பட உள்ளனகூடுதல் தகவல்களுக்குகண்ணபிரான்ஒருங்கிணைப்பாளர் கலிலியோ அறிவியல் கழகம் தொடர்புக்கு: 87782 01926.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain