பொங்கல் பரிசு ரூ.2500 வாங்காவிட்டால் திரும்ப கிடைக்குமா???

பொங்கல் பரிசு ரூ.2500 வாங்காவிட்டால் திரும்ப கிடைக்குமா???
Will I get back the Pongal gift if I do not buy it for Rs. 2500 ???

பொங்கல் பரிசு ரூ.2500 வாங்காவிட்டால் திரும்ப கிடைக்குமா???

தமிழகத்தில் இந்த வருடம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக இலவச வேட்டி சேலையுடன் 2500 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி டோக்கன் வினியோகம் நிறுத்தப்படும்.

அதன்பிறகு ஜனவரி 4ஆம் தேதி முதல் ஜனவரி 12-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்படும்.

அவ்வாறு குறிப்பிட்ட நாட்களில் பொங்கல் பரிசு வாங்காதவர்கள் ஜனவரி 13-ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம்.

மேலும் தொப்புளில் குறிப்பிடும் நாளில் மட்டுமே ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும்அவ்வாறு செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து ஒரு மீட்டர் இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கம் வினியோகம் குறித்த புகார்கள் இருந்தால் சம்மந்தப்பட்ட தாசில்தார் அலைபேசியில் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain