ஓய்வூதியதாரர்கள் எதிர்வரும் 2021-ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம்

ஓய்வூதியதாரர்கள் எதிர்வரும் 2021-ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம்

Retirees can submit their pension certificates for the upcoming 2021 year


ஓய்வூதியதாரர்கள் எதிர்வரும் 2021-ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம்

எம்.டி.சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஆயுட்கால சான்றிதழை தாங்கள் பணியாற்றிய இடத்திலேயே சமர்ப்பிக்கலாம் என மேலாண் இயக்குநர் இளங்கோவன் அறிவித்துள்ளார்.

மாநகர போக்குவரத்து கழகத்தில் ஏறத்தாழ 13,700-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்றவர்களுக்கு தமிழக அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியத்தின் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான சான்றிதல்களை போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் சமர்பித்துவருகிறார்கள்.

இந்நிலையில் ஓய்வு பெற்றவர்களின் வயது முதிர்வு மற்றும் நலனை கருத்தில் கொண்டு அவர்களது ஆயுட்கால சான்றிதழ்களை அடுத்த ஆண்டு முதல் அவர்கள் பணிபுரிந்த இடத்திலேயே கொடுக்கலாம் எனத் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதனடிப்படையில் ஓய்வூதியதாரர்கள் எதிர்வரும் 2021-ஆம் ஆண்டுக்கான ஓய்வூதிய சான்றிதழ்களை வரும் ஜனவரி மாதம் தொடங்கி மார்ச் 15-ஆம் தேதி வரை அலுவலக நாட்களில் சமர்ப்பிக்கலாம்மேலும் தலைமையகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் தலைமையகத்தில்பட்டுலாஸ் சாலை தொழிற்கூடத்தில்மண்டல தொழிற்கூடத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் அந்தந்த அலுவலகத்தில் ஆயுட்கால சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம்.

கே.கே நகர் பயணசீட்டு அச்சகத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் கே.கே நகர் பணிமனையில் குரோம்பேட்டை பேருந்து கூடுகட்டும் பிரிவில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் குரோம்பேட்டை-1 பணிமனையில் தங்கள் சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம்விடுபட்டவர்கள் தங்கள் தலைமையகத்தை அணுகி தங்களின் ஆயுட்கால சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு ஓய்வூதிய பிரிவு 044-23455801 extn.268 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

Check Related Post:

      Post a Comment

      © Daily News. All rights reserved. Developed by Jago Desain