பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் திறந்தநிலை கல்வியில் 124 இணையவழி படிப்புகள்

பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் திறந்தநிலை கல்வியில் 124 இணையவழி படிப்புகள்

124 eCommerce courses in Open Education on behalf of the University Grants Committee

பல்கலைக்கழக
மானியக் குழு சார்பில் திறந்தநிலை கல்வியில் 124 இணையவழி படிப்புகள்

திறந்தநிலை கல்வியில் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில் 124 இணையவழி படிப்புகளை யுஜிசி அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஆண்டு கரோனா பரவல்காரணமாக, பல்வேறு மாநிலங்களில் கல்லூரிகளைத் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களுக்கு இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர பல்வேறு ஆன்லைன் படிப்புகளை மத்திய அரசு தொடர்ந்து அறிமுகம் செய்துவருகிறது.

அந்தவகையில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் திறந்தநிலை கல்வியில் 124 இணையவழி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பொறியியல் அல்லாத இளநிலை மற்றும் முதுநிலைப் பாடப்பிரிவுகளை சேர்ந்தவை ஆகும்.

அதன்படி மத்திய அரசின் ஸ்வயம் வலைதளத்தில் 78 இளநிலை, 46 முதுநிலை பாடப்பிரிவுகளை மாணவர்கள் படிக்கலாம்இதன்மூலம் மாணவர்கள் கூடுதல் கல்வித்தகுதியை பெற முடியும்.

கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இதற்கான வழிகாட்டுதலை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாடப்பிரிவுகளின் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை https://swayam.gov.in/CEC மற்றும் https://www.ugc.ac.in இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

        Post a Comment

        © Daily News. All rights reserved. Developed by Jago Desain