தின ராசி பலன்-05.12.2020 (சனி கிழமை)

தின ராசி பலன்-05.12.2020 (சனி கிழமை)
Daily Horoscope - 05.12.2020 (Saturday)


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

தின ராசி பலன்-05.12.2020 (சனி கிழமை)

மேஷம்: வேலையை திட்டமிட்டு முடிப்பீர்கள். சொந்த பந்தங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து நினைத்த காரியத்தை முடித்துக் கொள்வீர்கள்எதிலும் யாரையும் நம்பி கையெழுத்து போடும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துக் கொள்ளவும்.

ரிஷபம்: சந்தோஷம் துக்கம் இரண்டையும் மாறி மாறி அனுபவிக்கப் போகிறீர்கள். தெய்வீக விஷயங்களில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள், அதில் முழு நம்பிக்கையுடன் பங்கு பெறுங்கள். வாய்ப்புண் எதுவும் வருவதற்கு காக்க உணவுக் கட்டுப்பாடு அவசியம்.

மிதுனம்: கோபத்தைக் கட்டுப்படுத்தி காரியங்களில் கவனத்தை செலுத்தவும். தொழிலை விமர்சிப்பவர்களை அமைதியாக அலட்சியப்படுத்துங்கள். வெற்றிவாகை சூடுவீர்கள். தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை மூன்றாம் நபர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

கடகம்: உங்கள் கவலைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் நாள். யார் யாரைப் பற்றி சொன்னாலும் ஆதாரமில்லாமல் எந்த விஷயத்தையும் நம்ப கூடாது. வீட்டிலுள்ளவர்களிடம் யோசனை கேட்டு எதையும் செய்வது உத்தமம்.

சிம்மம்: எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். தடைகளை முறியடித்து காரிய வெற்றி பெறலாம். வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் சில பாதிப்புகள் வரலாம். எனவே உணவு கட்டுப்பாடு அவசியமாகிறது.

கன்னி: உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள். விரும்பிய இடத்திற்கு பணி இட மாறுதல் கிடைக்கும். பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்: நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பண விரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம்.

விருச்சிகம்: எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் பிரத்தியேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம். ஆனாலும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும். வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு: வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகள், சமூக சேவை செய்வோர் நல்ல செல்வாக்கோடு காணப்படுவர். கௌரவம் உயரும்.

மகரம்: உஙக்ளின் பொருளாதார வலிமை கூடும். அதே வேளையில் பொருட்களின் மீதும் கவனமும் தேவை. இழப்பு ஏற்படலாம். வாழ்க்கையில் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கைவளம் முன்னேறும். தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

கும்பம்: சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தினில் சிற்சில பிரச்சனைகள் வரலாம். உடன் வேலை செய்வோரின் ஆதரவால் அதனைச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும்.

மீனம்: வீட்டில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். உறவினர் வகையிலும் கூட ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம். எதிர்பார்ப்புகள் வேண்டாம். தூரத்திலிருந்து விரும்பத்தகாத செய்திகள் வரலாம்.


For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain