தின ராசி பலன்-04.12.2020 (வெள்ளி கிழமை)

தின ராசி பலன்-04.12.2020 (வெள்ளி கிழமை)
Daily Horoscope - 04.12.2020 (Friday)

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here


தின
ராசி பலன்-04.12.2020 (வெள்ளி கிழமை)

மேஷம்: சிறுசிறு உஷ்ண சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். தூக்கத்தைக் கட்டுப்படுத்தாதீர்கள். எந்த பிரச்சனையாக  இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகவும். குடுமப வாழ்வில் பொறுமை தேவை.

ரிஷபம்: எடுத்த காரியத்தில் உறுதியாக இருங்கள். வீண் பேச்சு கூடவே கூடாது. வியாபார ரீதியாக  போட்டிகள் வரலாம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். வம்பு வழக்கு கூடவே கூடாது. மனக்குழப்பம் ஏற்பட்டால் அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று வரவும்.

மிதுனம்: பெற்றோரது ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டடரத்தில் மதிப்பு, மரியாதை  உயரும். எந்த மனிதரையும் விமர்சனம் வெளியில் வைத்து விமர்சனம் செய்ய வேண்டாம். அரசு விஷயாதிகளில்  நிதானத்தையும், பொறுமையையும் கடைபிடிக்கவும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பிரியமானவர்களிடம்  அடிக்கடி உரையாடுங்கள்.

கடகம்: சொத்து சிக்கல்களில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள். தாய் மற்றும் தாய்  வழி உறவினர்களிடம் சிறுசிறு சலசலப்பு ஏற்பட்டு சரியாகும். அலைச்சகள் நிறைந்த பயணங்கள் நிரம்ப இருக்கும்பணத்தட்டுப்பாடு குறையும். தியானம் யோகா போன்றவற்றில் மனம் செலுத்துங்கள். முடிந்த வரை இரவு நேர  பயணங்களை தவிருங்கள். தடைபட்டிருந்த கட்டிட வேலைகள் முடிவடையும்.

சிம்மம்: சுபகாரியங்களில் கலந்து  கொள்வீர்கள். வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் சந்தர்பம் அறிந்து செயல்படுங்கள். கொடுக்கலில் வாங்கலில் கவனம்  தேவை. கடன் கொடுக்கவும் வாங்கவும் கூடவே கூடாது. பங்குதாரர்களை அனுசரித்து போகவும். நம்பிக்கைக்கு  உரியவர்களிடம் ஆலோசனைகள் பெற்று காரியங்களில் இறங்கவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு  கிடைக்கும்.

கன்னி: சம்பளம் உயரும். இடமாறுதல் கிடைக்கும். அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்மணமாகாதவர்களுக்கு மணமாகும். சுபச்செலவுகள் இருக்கும். குழந்ததயில்லாதவர்களுக்கு பாக்கியம் கிட்டும். வீடுவாகனம், மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை.

துலாம்: மேற்படிப்பு விஷயமாக வெளிநாடு செல்வோர் மிகுந்த  கவனமாக செயல்படவும். முடிந்தவரை வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும். மாணவமணிகளுக்கு உயர்கல்வி  கிடைக்கும். நினைத்த மதிப்பெண்களை கொஞ்சம் முயற்சி செய்தால் அள்ளலாம். கலைஞர்கள் விருதுகள் பெறுவார்கள்.

விருச்சிகம்: குடும்பத்தில் நல்ல செய்திகள் தேடி வரும். குறிப்பாக குடும்ப விஷயம் சம்பந்தமாக தூரத்திலிருந்து செய்திகள் வரும். வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகள் தாய்நாடு வரலாம். தேவையற்ற வீண் விவாதங்களில் மூக்கை நுழைத்து வம்பை வாங்க வேண்டாம்.

தனுசு: குடும்பத்தில் சமீப காலமாக இழுத்து கொண்டிருந்த ஒரு பிரச்சனை முடிவுக்கு வந்து சேரும். வாகனத்தை ஓட்டும்போதோ பயணிக்கும்போதோ கவனம் தேவை. எந்த விஷயங்களிலும் மந்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம். உங்கள் மேல் அக்கறை காட்டுபவர்களிடத்தில் அன்பு செலுத்துங்கள்.

மகரம்: எதிர்பாராத வகையில் திடீரென்று செலவுகள் வரலாம். மனதைப் பக்குவப்படுத்தி செல்வுகளை திட்டமிட்டால் சிறிது சேமிக்கலாம். புதிய தொழில் வாய்ப்புக்கு இன்றைய நாளில் ஆலோசனைகள் மேற்கொள்வீர்கள். வீட்டிலுள்ள பெரியவர்கள் உடல் நலனில் அக்கறை காட்டவும்.

கும்பம்: பிரச்சனைகளில் முடிந்தவரை நீங்களே விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. அதனால் உங்களுக்கு மேன்மை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகளில் தேர்ந்தெடுத்து இறங்குவதற்கு மிகச் சரியான நாளாகும். சிலருக்கு துஷ்ட சகவாசத்தால் துன்பங்கள் நேரிடலாம்.

மீனம்: இரவுப் பயணத்தை முடிந்த வரை தவிர்க்கப் பாருங்கள். வீட்டிலும், வெளியிலும் உங்கள் வாதத்திறமையால் எதுவும் சாதிக்கலாம். மிகவும் அமைதியாக இருந்து காரியத்தை முடித்துக் கொள்வீ்ர்கள். நீங்கள் முக்கியமான நபர் ஒருவரை இன்று சந்தித்து லாபம் பெறுவீர்கள்.


For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain