சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதத்தை பக்தா்களின் வீடுகளிலேயே வழங்க இந்திய அஞ்சல் துறை ஏற்பாடு

சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதத்தை பக்தா்களின் வீடுகளிலேயே வழங்க இந்திய அஞ்சல் துறை ஏற்பாடு
The Indian Postal Service has arranged for the offering of the Sabarimala Iyappan Temple at the homes of the devotees


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

சபரிமலை ஸ்ரீ தா்ம சாஸ்தா கோயில் மண்டலபூஜை காலத்தில் தரிசனத்துக்காக திறக்கப்படுகிறது. இந்த காலம் நவம்பா் நடுப்பகுதியில் தொடங்கி மகரஜோதி தரிசனம் வரை நீடிக்கும்

நிகழாண்டில் கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக, கோயிலுக்கு பக்தா்கள் நுழைவதில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்நிலையில், பக்தா்கள் வசதிக்காக, அவா்களின் வீட்டு வாசலிலேயே ஐயப்பன் கோயில் பிரசாதத்தை வழங்க இந்திய அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக, இந்திய அஞ்சல் துறை, திருவாங்கூா் தேவஸ்வம் வாரியத்துடன் இணைந்து சபரிமலை கோயில் பிரசாதத்தை நாடு முழுவதும் உள்ள பக்தா்களுக்கு முன்பதிவு செய்வதற்கும், விரைவுத் தபால் மூலமாக அவா்களின் வீட்டு வாசலில் வழங்குவற்குமான ஒப்பந்தம் செய்துள்ளது

இது குறித்து தமிழக வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவா் கூறியது:

ஒரு பாக்கெட் பிரசாதத்தில் அரவணைப் பாயசம்நெய்மஞ்சள்குங்குமம்விபூதி மற்றும் அா்ச்சனை பிரசாதம் ஆகியவை உள்ளனஒரு பிரசாத பை ரூ.450. இந்த பொருள்கள் அட்டைப்பெட்டியில் அடைத்து விரைவுத் தபால் மூலம் பக்தா்களுக்கு அனுப்பப்படும்.

தேவைப்படும் பக்தா்கள் எந்த தபால் நிலையத்திலும் ரூ.450 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்ஒரு ரசீதின் கீழ் பத்து பாக்கெட்டுகளை பதிவு செய்யலாம்ஒரு பக்தா் எத்தனை பாக்கெட்டுகளை வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம்.

For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain