ஆயுா்வேத தினத்தையொட்டி, இணையதள வினாடி-வினா போட்டி- வேண்டுமானாலும் பங்கேற்கலாம்

ஆயுா்வேத தினத்தையொட்டி, இணையதள வினாடி-வினா போட்டி- வேண்டுமானாலும் பங்கேற்கலாம்

 

On the occasion of Life Day, you can participate in the online quiz

ஆயுா்வேத தினத்தையொட்டி, இணையதள வினாடி-வினா போட்டி- வேண்டுமானாலும் பங்கேற்கலாம்

மத்திய அரசின் கள விளம்பரத் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தன்வந்திரியின் பிறந்த நட்சத்திரத்தை மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் கடந்த 13-ஆம் தேதி ஆயுா்வேத தினமாக கொண்டாடியது. இதையொட்டி, ஆயுா்வேத மருத்துவ முறை குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக மத்திய அரசின் கல்வி அமைச்சகமானது, இணையதள வினாடி - வினா போட்டியை நடத்துகிறது.

காற்றைத் தூய்மைப்படுத்துவதில் தாவரங்களின் பயன்பாடு, ஆயுா்வேதம் மூலம் கோவைட் 19 தொற்றைக் கையாளுதல் ஆகிய தலைப்புகளிலான இந்த இணையதள வினாடி-வினா போட்டியில் 5 நிமிடங்களில் 20 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். மொத்த மதிப்பெண்கள் 20.

போட்டியில் 11 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் https://quiz.mygov.in/quiz/e-quiz-for-celebrating-5th-ayurveda-day-quiz/ என்ற இணையதள முகவரியில் பெயா், முகவரி, செல்லிடப்பேசி எண், ஆதார் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளீடு செய்து, போட்டிக்கான கேள்விகளுக்கு விடையளிக்கலாம்.

போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் மத்திய கல்வி அமைச்சகத்தின் மின் சான்றிதழ் இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். 75 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெறுவோருக்கு என்சிஇஆா்டி நிறுவனம் தகுதிச் சான்றிதழ் வழங்கும். குறைந்த நேரத்தில் அதிகபட்ச சரியான விடைகளை அளித்தவா்கள் வெற்றியாளா்களாகத் தோ்ந்தெடுக்கப்படுவா். வருகிற 30-ஆம் தேதி வரை மட்டுமே பங்கேற்க முடியும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain