காசோலை துண்டிப்பு முறை திட்டம் - SBI.ல் சம்பள கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு

காசோலை துண்டிப்பு முறை திட்டம் - SBI.ல் சம்பள கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு

 

Check Discard Scheme - A New Notice for Payroll Account Holders in SBI

SBI-யில் சம்பள கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமீபத்தில், ‘காசோலை துண்டிப்பு முறைஎன்ற புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்தது.

இந்த திட்டம் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் காசோலையை வங்கியில் செலுத்துவதற்கு முன் SMS, மொபைல் ஆப், இன்டர்நெட் பேங்கிங், Paytm ஆகியவை மூலம் சம்மந்தப்பட்ட வங்கிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும், அதில் பணத்தை பெறுபவரின் பெயர், தொகை, தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை வங்கிகள் விரைவில் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தபட்டுள்ளது. இந்த முறை மூலம் யாருக்கு காசோலை வழங்கப்படுகிறது. அந்த காசோலை உண்மையானதா என்பது உள்ளிட்ட தகவல்கள் உறுதி செய்யப்படும்.

ரூ.5 லட்சத்திற்கு அதிகமான தொகை உள்ள காசோலைகளுக்கு இந்த முறை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் காசோலை முறைகேடுகள் நடப்பது தடுக்கப்படும். இந்த புதிய முறை குறித்து சம்மந்தப்பட்ட வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு SMS, வங்கிகளில் அறிவிப்பு பலகை ஆகியவை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

ஒரு பெரிய தொகைக்கான அதாவது ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் காசோலைகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் போது சம்மந்தப்பட்ட வங்கிக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த காசோலை மூலம் பணம் பெறவோ, பணம் செலுத்தவோ முடியாது என்ற புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி ஜனவரி 1 முதல் அறிமுகம் செய்யவுள்ளது. வணிகம், சொந்த செலவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பணம் பெறவோ, பணத்தை செலுத்தவோ வங்கிகளில் நாம் காசோலைகளை கொடுக்கிறோம். இந்த காசோலைகளை பணமாக மாற்றும்போது பணம் பெறும் நபரின் வங்கி கணக்கு எண், பெயர் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain