கலா உத்ஸவ் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

கலா உத்ஸவ் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

 

Apply for Kala Utsav competitions

புதுவை கல்வித் துறை சார்பில் நடத்தப்படவுள்ள கலா உத்ஸவ் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

புதுவை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் இடைநிலைக் கல்வி பயிலும் பள்ளி மாணவா்களின் தனித் திறன்களை வெளிக்கொணறும் வகையில், கலா உத்ஸவ் கலைப் போட்டிகளை தேசிய அளவில் நடத்தி வருகிறது. நிகழாண்டு கலைப் போட்டிகள் இணையவழியில் நடத்தப்பட உள்ளது. தனி நபா் (ஆண், பெண்) பிரிவில் வாய்ப்பாட்டு, நடனம், இசைக்கருவி மீட்டல், ஓவியம் உள்பட 9 பிரிவுகளில் புதுவையின் 4 மாவட்டங்களிலும் போட்டிகள் நடைபெற உள்ளன.

விவரங்களுக்கு கு.பாஸ்கர ராசு 94427 87052, 0413-2225751 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

போட்டிகளுக்கான விதிமுறைகள் நுழைவுப் படிவத்தை  இணையதளத்திலும் அறியலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தை நிறைவு செய்து, பள்ளித் தலைமை ஆசிரியரின் கையொப்பத்துடன், வருகிற டிசம்பா் 4-க்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain