ரூ.2,000 தரும் மோடி அரசு... பணம் எப்போ வருது தெரியுமா?

ரூ.2,000 தரும் மோடி அரசு... பணம் எப்போ வருது தெரியுமா?

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here


விவசாய நிதியுதவித் திட்டத்தின் ஏழாவது தவணைப் பணம் இந்த மாதம் இந்தத் தேதியில் அனைவரின் வங்கிக் கணக்கிலும் டெபாசிட் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எப்போது பணம் கிடைக்கும்? யாருக்கெல்லாம் பணம் கிடைக்கும் என்று பார்க்கலாம் வாருங்கள்.

விவசாய நிதியுதவித் திட்டம்!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தீன் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, 2018ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. 2019-20 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று முறை ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு விரைந்து பணம் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டு அதன்படி வழங்கப்பட்டு வருகிறது.

யாருக்கெல்லாம் பணம் கிடைக்கும்?

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் விண்ணப்பிக்கலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதேநேரம், நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் மாதத்திற்கு 10,000 ரூபாய்க்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்கள் போன்றோர் இந்த நிதியுதவிக்கு விண்ணப்பிக்க முடியாது.

ஆறாவது தவணைப் பணம்!

விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆறாவது தவணைப் பணம் அரசு தரப்பிலிருந்து டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. ஆறாவது தவணைக்கான பணம் ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையில் வழங்கப்படுகிறது. பலருக்கு இந்தப் பணம் வந்துவிட்டதா இல்லையா என்ற சந்தேகம் இருக்கும். அதைத் தெரிந்துகொள்வதற்கு பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ என்பதில் சென்று பார்க்கலாம். இந்த முகவரியை ஓப்பன் செய்தால் அதில் ’Farmers Corner’ என்ற வசதி இருக்கும். அதை கிளிக் செய்யவும். beneficiary status அல்லது beneficiary list என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதை ஓப்பன் செய்தவுடன் புதிய திரை ஒன்று வரும். அதில் ஆதார் எண், மொபைல் எண் போன்ற விவரங்கள் வரும். அதைப் பூர்த்தி செய்து சமர்ப்பித்தால் உங்களுக்குத் தேவையான தகவல் அதில் கிடைக்கும்.

அடுத்த தவணைப் பணம் எப்போது?

விவசாய நிதியுதவித் திட்டத்தின் ஏழாவது தவணைப் பணம் டிசம்பர் 1ஆம் தேதி முதல் டெபாசிட் செய்யப்படும் என்று மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. ஏழாவது தவணைப் பணத்தை நீங்கள் பெறுவதற்கு முன் ஆறாவது தவணைக்கான 2,000 ரூபாய் நீங்கள் இன்னும் பெறவில்லை என்றால், அதில் என்ன தவறு நடந்தது என்று கண்டுபிடித்து அதைச் சரிசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஏழாவது தவணைப் பணமும் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இன்னும் சில நாட்கள்மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் பலருக்கு இன்னும் ஆறாவது தவணைப் பணமே இன்னும் வந்துசேரவில்லை என்று கூறப்படுகிறது. எனவே நீங்கள் ஆறாவது தவணைத் தொகையைப் பெறவில்லை என்றால் விரைவில் விண்ணப்பப் படிவத்தில் உள்ள தவறுகளைச் சரிசெய்ய வேண்டும்.


For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain